தனியார் பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கிய 1 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது.
1 வயது குழந்தை
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த லத்துவாடி கிராமத்தில் வசித்து வருபவர் காசி. கூலி தொழிலாளியான இவருக்கு 4 வயதில் வேதாசினி என்ற மகளும், 1 வயதில் பவனிகாஸ்ரீ என்ற குழந்தையும் உள்ளது. வீரகனூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேதாசினி எல்.கே.ஜி. படித்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை வேதாசினியின் தாயார் சுதா, அவரை பள்ளி பேருந்தில் ஏற்றி விடுவதற்காக வீட்டின் வெளியே நெடுஞ்சாலைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது இவர்களை பின் தொடர்ந்து வந்த அந்த 1 வயது குழந்தை பவனிகாஸ்ரீ மீது பள்ளி பேருந்து சக்கரம் ஏறியதில் குழந்தையின் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
அதனையடுத்து தகவலறிந்து அங்கு சென்ற வீரகனூர் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு, பிரேத சோதனைக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

