சமூகம் - வாழ்க்கைசுற்றுசூழல்தமிழ்நாடு

விழுப்புரத்தில் பனை திருவிழா – காட்சிப்படுத்தப்பட்ட கைவினை கலை பொருட்கள் !

விழுப்புரம் அடுத்த பூரிக்குடியில் பனை திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு கைவினை பொருட்களை வாங்கி சென்றனர்.

பனை திருவிழா

விழுப்புரம் அடுத்த பூரிக்குடியில் என்ற கிராமத்தில் பனங்காடு அறக்கட்டளை சார்பாக இரண்டு நாள் பனை திருவிழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பூரிக்குடியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பனையேறிகள் பறை அடித்தும், சிலம்பம் சுற்றியும், பனை மரத்திற்கு பொங்கலிட்டும் திருவிழாவினை தொடங்கி வைத்தனர்.

பனை பழம்

கைவினை பொருட்கள்

இதனை தொடர்ந்து பனை திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் பனை நுங்கு, பதநீர்,  பனங்கள்ளை உண்டு மகிழ்ந்தனர். பனை திருவிழாவில் பனை பொருட்களால் செய்யப்படும் அழகு சார்ந்த பொருட்கள், இயற்கை பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டு விற்பனை செய்யபட்டன. மேலும், பனையினால் ஏற்படும் நன்மைகள் குறித்த கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு கைவினை பொருட்களை வாங்கி சென்றனர்.

பனை கைவினை பொருட்கள்

உறுதிமொழி

பனையேறிகள் தமிழகத்தில் கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டுமெனவும் கள் ஒரு போதை பொருள் இல்லை என்பதை அனைவரிடமும் கொண்டு செல்வோம் என ‘உறுதிமொழி ‘எடுத்து கொண்டனர். பனை மரத்தின் பொருட்களால் உணவு மற்றும் அழகுப்பொருட்கள் செய்து பொருளாதாரத்தினை உயர்த்த முதல் முறையாக பூரிகுடியில் நடைபெறும் பனை திருவிழா அனைவரிடத்திலும் முன்னுதாரணமாக இருக்கும் என பனங்காடு அறக்கட்டளை தெரிவிக்கின்றனர்.

விழிப்புணர்வு

மேலும் இந்த பனை திருவிழாவின் முக்கிய நோக்கம் என்னவென்றால், பனை ஏறும் தொழிலாளர்களின் முக்கியத்துவம் மற்ற பொதுமக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த பனை திருவிழா நடத்தப்பட்டது என பனங்காடு அறக்கட்டளை சார்பாக தெரிவிக்கப்பட்டது.

 

Related posts