Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, September 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»வணிகம்»நூறாண்டுகள் கடந்தும் குறையாத மவுசு – மிதிவண்டியின் வணிக வரலாறு ஒரு சிறு தொகுப்பு

நூறாண்டுகள் கடந்தும் குறையாத மவுசு – மிதிவண்டியின் வணிக வரலாறு ஒரு சிறு தொகுப்பு

June 20, 20222 Mins Read117 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மனிதர்களின் பயணத்தை துரிதப்படுத்த பல வாகனங்கள் வந்திருந்தாலும் சைக்கிள்களுக்கு இருக்கும் மவுசு என்றும் குறையவில்லை. அதிலும் சைக்கிள் மீது உலக மக்கள் கொண்டுள்ள மோகம் கொரோனா முதல் அலைக்கு பிறகு அதிகரித்த வண்ணம் உள்ளது என்ற தகவலும் கிடைத்துள்ளது.

சிலர் உடல் ஆரோக்கியத்திற்காகவும்,  சுற்றுச்சூழலை காக்கும் நோக்கிலும், நிதி சிக்கலை சமாளிப்பதற்காகவும் மிதிவண்டியை மிதித்தபடி நம் ஊர்களின் சாலைகளில் பயணிக்கின்றனர்.

cycling

இந்த சைக்கிள் எனப்படும் மிதிவண்டியின் வணிக வரலாற்றை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம் வாருங்கள்.

19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் சைக்கிள் உலகிற்கு அறிமுகமாகியுள்ளது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த ‘கார்ல் வான் டிராய்ஸ்’ என்பவர்தான் முதல் இரு சக்கர வாகனத்தை வடிவமைத்தது.

முழுவதும் மரத்தினாலான அதனை Dandy horse என சொல்லியுள்ளனர். அதற்கு காப்புரிமையும் அவர் பெற்றதாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் வடிவமைப்பில் மாற்றம் பெற்ற சைக்கிளில் இறுதியாக ‘பெடல்’ பொருத்தப்பட்டுள்ளது.

history of cycle

அதன் பின்னர் பெருமளவில் வணிக நோக்கத்துடன் சைக்கிள் உருவாக்கப்பட்டு, சந்தைபடுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  சீன பொருட்கள் மீது 100 சதவீத கூடுதல் வரி - டிரம்ப்
சைக்கிள் இந்தியாவிற்குள் வந்த வரலாறு :

காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில் 1890களில் சைக்கிள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகி உள்ளது. 1910 துவங்கி 1946 வரை சுமார் 2.5 பில்லியன் சைக்கிள்கள் இந்தியாவில் இறக்குமதியாகி உள்ளன.

ராலி, பி.எஸ்.ஏ, ரட்ஜ், ஹம்பர் என பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகமாக இருந்தது.

1940களில் இறக்குமதி பொருட்களின் மீதான வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து இந்தியாவிலிருந்த தொழில் முனைவோர்கள், மேல் நாட்டு நிறுவனங்கள் உடன் கூட்டு சேர்ந்து இந்தியாவிலேயே சைக்கிள் உற்பத்தி செய்யும் பணியில் இறங்கினர்.

bicycle

அதற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பை கூர்ந்து கவனித்த இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர்கள் நேரடியாக சைக்கிள் உற்பத்தி பணியை தொடங்கினர்.

அதற்கு இந்தியா சுதந்திரம் பெற்றதும் மிக முக்கிய காரணமாக அமைந்தது.

ஹீரோ, ஏவான், ஹெர்குலஸ், TI சைக்கிள்ஸ் ஆப் இந்தியா மாதிரியான நிறுவனங்கள் இந்தியாவில் பல ஆண்டுகளாக சைக்கிள் உற்பத்தி தொழிலை மேற்கொண்டு வருகின்றன. அதுதவிர அட்லஸ் சைக்கிள் நிறுவனம் உற்பத்தியை நிறுத்திக் கொண்டுள்ளது.

இதையும் படிக்க :  காட்டெருமையை வேட்டையாடி கறியை பதப்படுத்திய நபர்கள் - வழக்குப்பதிவு செய்து பறிமுதல் !

1970கள் தொடங்கி 2000 வரையில் இந்திய சாலைகளில் அதிகம் றெக்கை கட்டி பறந்தது சைக்கிள்கள்தான். வீட்டுக்கு ஒரு சைக்கிள் இருப்பதே தனி அந்தஸ்தாக பார்க்கப்பட்டது.

சைக்கிளில் பொருத்தப்பட்டிருக்கும் டைனமோ அதன் முகப்பில் பொருத்தப்பட்டிருக்கும் விளக்குகள் ஒளிர்வதற்கான மின் சக்தியை உருவாக்கி கொடுத்தன.

indian bicycle

இப்படி இந்திய சாலையில் இளையோர் முதல் அனைத்து வயதினரையும் கவர்ந்திருந்த சைக்கிள் மோட்டார் வாகனங்களின் படையெடுப்பால் தனது மவுசை இழந்தது.

பள்ளி செல்லும் மாணவர்கள், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துபவர்கள் மட்டுமே சைக்கிளை பயன்படுத்தும் நிலை உருவானது. அதனால் சைக்கிள் உற்பத்தி நிறுவனங்கள் திகைத்தன.

மெல்ல தனது சந்தை வாய்ப்பை சைக்கிள் இழந்தது. இந்த நிலையில் தான் கடந்த சில ஆண்டுகளாக தனது மகத்துவத்தை மீண்டும் பெறத் தொடங்கியது சைக்கிள்.

bicycycle british industry BSA business cycle dandy horse dynamo light european cycle manufacturers Export featured finance Hero History import industry karl van drais rally trade vehicles
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவிழுப்புரத்தில் பனை திருவிழா – காட்சிப்படுத்தப்பட்ட கைவினை கலை பொருட்கள் !
Next Article ஏவுகணைகளால் ஆங்கிலேய படைகளை திணறடித்த திப்பு சுல்தான் – ஆச்சர்யமூட்டும் வரலாற்று பதிவு

Related Posts

வணிகம்

மீண்டும் ஏறுமுகம் : மாலையில் ரூ.880 உயர்ந்த தங்கம்

March 30, 2026
தமிழ்நாடு

வாரத்தின் முதல் நாளிலேயே குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,08,800-க்கு விற்பனை

March 30, 2026
வணிகம்

மீண்டும் அதிர்ச்சி : ரூ.14 ஆயிரத்தை நெருங்கும் ஒரு கிராம் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் தெரிஞ்சுக்கோங்க !

March 28, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,958 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,180 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,163 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,958 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,180 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,163 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.