சமூகம்தமிழ்நாடு

முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் 145 சவரன் நகை, 20 லட்சம் ரூபாய் கொள்ளை !

காஞ்சிபுரம் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் 145 சவரன் நகை மற்றும் 20 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து உள்ளனர்.

கொள்ளை சம்பவம்

காஞ்சிபுரம் அருகே உள்ள பெரிய நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் பாஞ்சாயத்து தலைவர் கணபதி. இவர் நேற்று அமாவாசை என்பதால் கடந்த 25ம் தேதி தனது குடும்பத்துடன் கணபதி காலை ராமேசுவரம் கோவிலுக்கு சென்று உள்ளார். ராமேசுவரத்தில் கோவிலில் சாமி தரிசம் செய்து விட்டு நேற்று மாலை கணபதி தனது குடுபத்துடன் வீடு திரும்பினார். வீட்டிற்கு அவர்கள் வந்ததும் வீட்டின் கதவு சேதம் அடைந்திருந்தத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 145 சவரன் தங்கம், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 20 லட்சம் ரூபாய் பணம் திருடு போய் இருப்பது தெரியவந்தது. பின்னர், இது குறித்து கணபதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts