சென்னையில் உள்ள துபாய் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, காவல் கட்டுபாட்டு அறைக்கு வந்த அழைப்பின் படி சென்னையிலிருந்து துபாய் செல்லும் இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், தகவலின் பெயரில் காவல்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த விமான நிலையத்திலும், விமானத்திலும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இன்று காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக கிளம்பியது. இந்த விமானத்தில் சுமார் 160 பயணிகள் இருந்த நிலையில், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு யார்? தகவல் அளித்தார் என்பன குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

