சினிமாமருத்துவம்

இயக்குனர் பாரதிராஜா வேறு மருத்துவமனைக்கு மாற்றம் !

பிரபல இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா மேல் சிகிச்சைக்காக தற்போது வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேல் சிகிச்சை

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக கொடிக்கட்டி பறந்தவர் பாரதிராஜா. 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானா இவர் தொடர்ந்து சிகப்பு ரோஜாக்கள், கிழக்கே போகும் ரயில், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். மேலும், குரங்கு பொம்மை, படைவீரன், நம்ம வீட்டு பிள்ளை, ஈஸ்வரன், திருசிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்தும் உள்ளார். இதனிடையே கடந்த 23ம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் பாரதிராஜா சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா தற்போது மேல் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts