அரசியல்தமிழ்நாடு

மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் இன்று தொடக்கம் !

37 மாவட்டங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது.

உணவு வழங்கும் திட்டம்

அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நேற்று தொடங்கி வைத்தார். மேலும், குழந்தைகளுக்கு உணவுகளை ஊட்டிவிட்டு மகிழ்ந்தார். இந்நிலையில், முதல் கட்டமாக 37 மாவட்டங்களில் இன்று காலை உணவு வழங்கும் திட்டத்தை, தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளிகளில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும், மாதவரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதேபோல் கோவையில் உள்ள பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்துள்ளார். இன்று மாணவர்களுக்கு மாணவர்களுக்கு கிச்சடியும் கூடுதலாக கேசரியும் பரிமாறப்பட்டன.

Related posts