கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜிகர்தண்டா-2 படத்தில் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஜிகர்தண்டா-2
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சித்தார்த் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா’. லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்திருந்த இப்படத்தில் பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்காக அவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். மேலும், படம் ரசிகர்களிடம் பாராட்டுக்களையும் பெற்றது. ஜிகர்தண்டா படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் படத்தின் இரண்டாம் பாகத்தை கார்த்திக் சுப்பராஜ் உறுதி செய்தார்.
இந்நிலையில், ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

