சினிமாவெள்ளித்திரை

தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து வரும் புதிய படத்தின் டைட்டிலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

திருச்சிற்றம்பலம் படம்

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் திருச்சிற்றம்பலம். இத்திரைப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருகும் இப்படம் ஆகஸ்ட் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 தனுஷ், அருண் மாதேஸ்வரன்

தனுஷ் படங்கள்

இதனையடுத்து தனுஷ் நடிப்பில் தி கிரே மேன், செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், வாத்தி, ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. அதணைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார். பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் மலையாள நடிகர் விநாயகன் நடித்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ்

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, ஏற்கனவே தனுஷ் நடித்த தொடரி, பட்டாஸ், மாறன் ஆகிய படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தற்போது நான்காவது முறையாக தனுஷ் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை முதலில் ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்குவதாக இருந்தது. அதன்பிறகு அருண் மாதேஸ்வரன் ஒப்பந்தமானார். ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர் அருண் மாதேஸ்வரன்.

தனுஷ் பட தலைப்பு

தனுஷ் மற்றும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இணைந்து பணியாற்றும் இந்த படத்திற்கு ‘கேப்டன்மில்லர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன்பெயரில் படத்தின் டைட்டில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், ‘கேப்டன்மில்லர்’ படம் வரலாற்று பின்னணியில் உருவாகும் அதிரடி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் வெளியாகும் என்று தகவல்ககள் வெளியாகியுள்ளது.

 

Related posts