சமூகம்தமிழ்நாடு

லாட்ஜ்ல் மது குடித்து கள்ளக்காதலர்கள் தற்கொலை – ஈரோடு அருகே பரபரப்பு..!

ஈரோட்டில் லாட்ஜ்ல் தங்கிய கள்ளக்காதல் தம்பதிகள் எலிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

ஈரோடு மாவட்டம்

ஈரோடு மாவட்டம் திருமலை நகரை சேர்ந்தவர் சண்முகம். இவர் ஈரோடு மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சண்முகத்திற்கும் மனைவி தமிழ்செல்வியின் உறவினரான காந்திமதிக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் தமிழ்செல்விக்கு தெரிய வந்ததால் சண்முகம் மனைவி தமிழ்செல்வி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

erode

தனியார் லாட்ஜ்

இதுகுறித்து என்ன செய்வது என்று தெரியாத இருந்த சண்முகமும், காந்திமதியும் நேற்று காலை ஈரோடு சந்தி சாலையில் உள்ள தனியார் லாட்ஜ்யில் கணவன் மனைவி என்று சொல்லி அறை எடுத்து தங்கியுள்ளனர். மேலும், மருத்துவமனைக்கு செல்ல இருப்பதாக கூறி லாட்ஜ்யில் தங்கியுள்ளனர். இன்று காலை அவர்கள் தங்கியிருந்த அறையின் கதவுகள் வெகுநேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறையை திறக்க முயன்றுள்ளனர்.

விசாரணை

இருப்பினும் கதவை திறக்க முடியாததால் வீரப்பன்சத்திரம் காவல்துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருவரும் மதுபானத்தில் எலி மருந்தை கலந்து உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி, அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர்.மேலும், தற்கொலை குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

police station

Related posts