சினிமாவெள்ளித்திரை

வெளியானது எஸ்.ஜே.சூர்யா பட புதிய போஸ்டர்!

புதிய போஸ்டர்

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கியதின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் அடுத்ததாக இயக்கி வரும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஷால், ரித்து வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், ‘மார்க் ஆண்டனி’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் ஜாக்கி பாண்டியன் என்ற கதாபாத்திரல் அவர் நடிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts