அரசியல்இந்தியாதமிழ்நாடு

அக்னிபத் : இளைஞர்களுக்கு பயிற்சி முகாம் – பாஜகவினர் ஏற்பாடு !

மதுரையில் அக்னிபத் திட்டம் மூலமாக ராணுவத்தில் இளைஞர்கள் சேர்வதற்காக வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி முகாமை பாஜகவினர் நடத்தி வருகின்றது.

அக்னிபத் திட்டம்

இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான “அக்னிபத்” என்னும் புதிய திட்டம் மூலம் சேர்க்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். வட மாநிலங்களில் இளைஞர்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறது. தற்போது இரண்டு லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர்வதற்கு விண்ணப்பித்திருக்கின்றனர்.

agnipath

மதுரையில் பயிற்சி முகாம்

இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வதற்கான வழிகாட்டல் மற்றும் பயிற்சி முகாம்களை பா.ஜ.க-வினர் நடத்தத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், இரண்டு நாள்கள் பயிற்சி முகாமை பா.ஜ.க-வினர் மதுரையில் நேற்று தொடங்கினர். மதுரை பொன்மேனியில் இந்தப் பயிற்சி முகாமை பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் டாக்டர்.எம். சரவணன் தொடங்கி வைத்தார். மேலும், பாஜக கட்சியை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். பாஜகவினர் அவர்களுக்கு உணவும், தங்கும் வசதியும் ஏற்பாடு செய்திருந்தனர். தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பயிற்சி முகாம் நடத்தப்படும் என பாஜவினர் கூறிவருகின்றனர்.

Related posts