பவர் ரேஞ்சர்ஸ்
1990-களில் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான தொலைகாட்சி தொடராக இருந்தது பவர் ரேஞ்சர்ஸ் தொடர். தீய சக்திகளை எதிர்த்து பவர் ரேஞ்சர்ஸ் குழுவினர் போராடி மக்களை காப்பாற்றுவது போன்று கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த தொடரில் நடிகர் டேவிட் ஃபிராங்க் கிரீன் ரேஞ்சராகவும் பின்னர் ஒயிட் ரேஞ்சராகவும் நடித்திருந்தார். மேலும், பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். டேவிட் ஃபிராங்க் கராத்தே போன்ற தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவில் வசித்து வந்த ஜேசன் டேவிட் ஃபிராங்க் திடீரென மரணமடைந்துள்ளார். 49 வயதான இவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
All of Ranger Nation is deeply saddened by the loss of Jason David Frank. JDF brought countless smiles to fans over the years and will be greatly missed. May the Power protect him, always. 💚
— POWER⚡️RANGERS (@PowerRangers) November 20, 2022