சினிமாவெள்ளித்திரை

கவனம் பெறும் வதந்தி டிரைலர்!

டிரைலர்

தமிழில் வாலி, குஷி போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. பின்னர் ‘அன்பே ஆருயிரே’, நியூ போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேலும், மாநாடு, டான் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார். இவர் தற்போது ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ள ‘வதந்தி’ எனும் இணைய தொடர் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர்கள் புஷ்கர் – காயத்ரி இந்த தொடரை தயாரித்துள்ளனர் மேலும், இந்த தொடர் வருகிற டிசம்பர் 2-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘வதந்தி’ இணைய தொடரின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Related posts