சினிமாவெள்ளித்திரை

வெங்கட் பிரபு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் 

நடிகர் நாக சைதன்யா நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘என்சி22’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இதில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர்.

இந்நிலையில், நாளை நடிகர் நாக சைதன்யா பிறந்த நாளையொட்டி இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Related posts