பிரபல தொழில் அதிபர் லெஜெண்ட் சரவணனின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
லெஜண்ட் சரவணன்
விளம்பரங்களில் நடித்தது மூலம் பிரபலமான தொழில் அதிபர் சரவணன் ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் தி லெஜெண்ட் என்ற திரைப்படத்தில் நடித்தார். ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக அறிமுகமான இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். மிகப்பிரமாண்டமாக உருவாகியிருந்த இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் கடந்த மாதம் வெளியானது. சுமார் 2500 திரையரங்குகளில் வெளியான தி லெஜெண்ட் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அடுத்த படம்
இந்நிலையில், சரவணன் தற்போது அடுத்த படத்திற்கு கதைகளை கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், காதல், ஆக்ஷன், நகைச்சுவை நிறைந்த படமாக இருக்க இருக்க வேண்டும் என்று சரவணன், இயக்குனர்களுக்கு கோரிக்கை வைப்பதாகவும் கூறப்படுகிறது

