தமிழகத்தில் முன்னேறிய மாவட்டம், பின் தங்கிய மாவட்டம் என்ற வேறுபாடு இருக்கக்கூடாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
மாநில திட்டக் குழு
சென்னை, சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள திட்டக் குழு அலுவலகத்தில், மாநில திட்டக் குழுவின் 3வது ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதலமைச்சர் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் மற்றும் முழுநேர, பகுதி நேர உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில், இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு, ஆலோசனை வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய முதல்வர், ‘அரசின் திட்டங்களுக்கும் மக்களுக்கும் இடைவெளி ஏற்படாமல் இருப்பதற்கான வழிகளை கண்டறிந்து திட்டத்தின் ஏற்றம், இரக்கம் குறித்து அரசுக்கு சொல்ல வேண்டும். மகளிர் திட்டத்தை இலவசம் என குறுகி பார்க்காமல் பொருளாதாரப் புரட்சி என எடுக்க வேண்டும். இனி வருங்காலத்தில் தமிழ்நாட்டில் முன்னேறிய மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் என்ற வேறுபாடு இருக்கக்கூடாது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வளர்ச்சியை திராவிட நாடு கொள்கையின் முக்கியமான குறிக்கோள் என தெரிவித்துள்ளார்.

