சினிமாவெள்ளித்திரை

விரைவில் வெளியாகும் ‘வாரிசு’ படத்தின் இரண்டாவது பாடல்!

வாரிசு படம் 

விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’.இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தில்ராஜு தயாரிக்கும் இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது.

இரண்டாவது பாடல்

இந்நிலையில், ‘வாரிசு’ படத்தின் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் இன்னொரு வெற்றிகரமான பாடல் வெளியாகவுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த இசையமைப்பாளர் தமன், “யோவ் ஜானி ரொம்ப பிரஷர் ஏத்துற” என்று பதிவிட்டுள்ளார். இவர்களின் இந்த பதிவு ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.

Related posts