அரசியல்சினிமா

பாஜகாவில் இருந்து பிரபல நடிகை அதிரடி நீக்கம்!

பிரபல நடிகை

பிரபு தேவா நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான சார்லி சாப்லின் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை காயத்ரி ரகுராம். அதனைத்தொடர்ந்து பரசுராம், விசில், வை ராஜா வை, அருவம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் பல படங்களில் நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். அதன்பின்னர் காயத்ரி ரகுராம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பாஜகாவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக பதவியும் வகித்து வந்தார்.

அதிரடி நீக்கம்

இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி காயத்ரி ரகுராம் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாதங்களுக்கு நீக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். மேலும், கட்சியின் நிர்வாகிகள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts