Editor's Picksசினிமா

ஆல்பம் பாடலை வெளியிட்ட விஜய் ஆண்டனி!

ஆல்பம் பாடல்

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மா.கா.பா.ஆனந்தும், ஆர்.ஜே.விஜய் இருவரும் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகை ஆஷ்னா சவேரி இணைந்து நடனமாடியுள்ளார். ‘உச்சிமலை காத்தவராயன்’ என்று தொடங்கும் இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் ஆனிவி இசையமைத்துள்ளார். மேலும், நடன இயக்குனர் சாண்டி நடனம் அமைக்க, மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த ஆல்பம் பாடலை டோங்கிலி ஜம்போ இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி, இந்த ‘உச்சிமலை காத்தவராயன்’ ஆல்பம் பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related posts