சினிமாவெள்ளித்திரை

இணையத்தில் வைரலாகும் தனுஷ் படத்தின் டீசர்!

வைரலாகும் டீசர்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘நானே வருவேன்’. இப்படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க , யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், கலைப்புலி எஸ்.தாணு தனது வி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் ‘நானே வருவேன்’ படத்தின் டீசர் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது வரை 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

Related posts