அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் திரைப்படத்தில் பிரம்மாண்ட சண்டைக்காட்சி ஒன்று உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய தகவல்
பிகில் படத்தை அடுத்து இயக்குனர் அட்லீ இயக்கி வரும் திரைப்படம் ‘ஜவான்’. ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக கௌரி கான் தயாரிக்கும் இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வருகிறது. மேலும், அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜவான் திரைப்படத்தில் 200 பெண்கள் இடம்பெறும் ஒரு பிரம்மாண்ட சண்டைக்காட்சி ஒன்று உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 7 நாட்கள் இந்தச் சண்டைக் காட்சி படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.