Monday Special

ஏவுகணைகளால் ஆங்கிலேய படைகளை திணறடித்த திப்பு சுல்தான் – ஆச்சர்யமூட்டும் வரலாற்று பதிவு

இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீர வரலாறு படைத்தவர் திப்பு சுல்தான். ஆங்கிலேயரை நடுநடுங்க வைத்த அந்த மாவீரன், போர் வியூகத்திலும், படைக்கலத் தயாரிப்பிலும் சிறந்து விளங்கினார்.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாகவே ராணுவத் தொழில்நுட்பத்திலும், வல்லமையிலும் திப்பு சுல்தான் படை சிறந்து விளங்கி ஆங்கிலேயப் படைகளை திணறடித்தது.

இதில், எதிரிகளின் முகாம்களை சீர்குலைத்து சின்னாபின்னமாக்கும் வகையிலான திப்புவின் ஏவுகணைகள் குறிப்பிடத்தக்கது. இன்று அந்த ஏவுகணைகள் மீண்டும் வெளியாகியிருப்பது உலக நாடுகளுக்கு பேரதிர்ச்சியே.

tipu sultan

சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில் நுட்பத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் திப்புசுல்தான். இதனாலேயே ஏவுகணைகளின் தந்தை என்ற புனைப் பெயரையும் இவர் கொண்டுள்ளார்.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி பயன்படுத்திய வி2 ராக்கெட்களுக்கு முன்னோடியாக திப்புவின் ராக்கெட் தொழில்நுட்பம் இருந்தது வரலாற்றுச் சிறப்பே.

இந்தியாவை சிறப்பாக ஆட்சி செய்த மன்னர்களில் முக்கிய பங்கு வகிப்பவர் திப்பு சுல்தான். ஹைதர் அலியின் இரண்டாவது மனைவியான ஃபாத்திமாவிற்கு மகனான இவர், தந்தையின் மரணத்திற்கு பிறகு ஆட்சியில் அமர்ந்தார்.

திப்புவை இவரது நெருங்கிய வட்டம் மைசூரின் புலி என்று புனைப்பெயர் வைத்து அழைப்பார்கள். ஆம், உண்மையில் போரின் போதும், தன் மக்களை பாதுகாப்பதிலும் புலியாகவே செயல்பட்டார்.

இந்தியாவை ஆட்டுவித்த கிழக்கிந்திய கம்பெனியும் குலை நடுங்கி அதிர்ந்தது திப்பு சுல்தான் என்ற பெயருக்கே. இன்றளவும் திப்புவின் பெயர் ஆங்கிலேயர்களை அதிர்ச்சியில் தான் வைத்திருக்கிறது. அவர் போர்க்கோலம் கொண்டு களம் கண்ட வயது 16.

tipu sultan vs british

1767-இல் வாணியம்பாடியில் நடந்த போரில் ஆங்கிலேயரைத் தோற்கடித்து தனது முதல் வெற்றியை பதிவு செய்த போது அவரது வயது 17.

தொடர்ந்து ஆற்றிய சிறப்பு மிக்க பணிகள், மக்கள் நலன் காத்தல் என 1782-யில் அவர் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32.

ஏவுகணை பிரிவு :

வலிமையான அதே சமயம் நவீன ராணுவத்தை உருவாக்க அரசுக்கான வருவாய் விவசாயம் மூலம்தான் வரும் என உணர்ந்த திப்பு சுல்தான் விவசாயிகளின் நலனிலும், விவசாயத்திலும் அதிக கவணம் செலுத்தினார்.

ஆங்கிலேய காலனியாதிக்கத்தை எதிர்த்து நிற்க முறையான பயிற்சியும், நவீன ஆயுதங்களும் கொண்ட ஒரு படை தேவை என்பதை உணர்ந்த திப்பு அந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்ள புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்க முனைந்தார்.

திப்புவின் தந்தை ஹைதர் அலி படைத்தலைவராக இருந்த காலத்திலேயே 50 பேர் கொண்ட ஒரு ஏவுகணைப் பிரிவுக்கு அவர் தலைவராக இருந்தார்.

ஹைதர் அலி காலத்தில் மூங்கில்களால் செய்யப்பட்ட இறக்கைகளை மேம்படுத்திய திப்பு தனது ஆட்சியில் இரும்பால் செய்யப்பட்ட இறக்கைகள் அமைத்து கூடுதல் திறன் கொண்டதாக மாற்றினார்.

tipu sultan rocket

அதன் காரணமாக உலகிலேயே போர்க்களத்தில் ஏவுகணையை முதன்முதலில் பயன்படுத்தியவர் என்ற சிறப்பை திப்பு பெற்றுக் கொண்டார்.

திப்புவின் ஆரம்பகால ஏவுகணைகள் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை துல்லியமாக சென்று தாக்கும் ஆற்றல் பெற்றதாக இருந்தது.

அது பற்றிய ஆவணங்கள் இன்றும் லண்டனில் பத்திரமாக உள்ளன. திப்புவின் ஏவுகணைகள் 2.2 கிலோ கிராம் முதல் 5.5 கிலோ கிராம் வரை இருந்தது.

நான்காம் மைசூர் போரில் திப்பு கொல்லப்பட்டபோது கைப்பற்றப்பட்ட திப்புவின் ஏவுகணைகளை ஆங்கிலேயர்கள் இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்று ஆராய்ந்து ஏவுகணைத் தொழில் நுட்பத்தை வளர்த்து மேம்படுத்தி கான்கிரீவ் ராக்கெட்களை உருவாக்கினார்கள்.

போரின் போதே திப்புவினுடைய ஏவுகணைகளை கைப்பற்றுவதில் ஆங்கிலேயர்கள் முனைப்புடன் செயல்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏவுகணைகளை பாதுகாக்க திட்டமிட்டார் திப்பு.

tipu sultan's missiles

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை எளிதில் காண முடியாதவாறு தன் கோட்டையின் கிணற்றில் மறைத்து வைத்தார். தற்போது அந்த ஏவுகணைகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஷிவப்பநாய்க்கா கோட்டை :

திப்பு தனது அட்சிக் காலத்தில் பல்வேறு கோட்டைகளையும், அரண்மணைகளையும் நிர்மாணித்திருந்தார். அவற்றுள் ஷிவப்பநாய்க்கா கோட்டையினை போர்த் தளவாடங்களை பாதுகாக்கும் பகுதியாக செயல்படுத்தினார்.

அக்கோட்டையில் உள்ள கிணற்றிலேயே பிற்காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

shivappa fort

எத்தனை எதிரிகள் படைசூழ வந்தாலும் அப்படைகளை தகர்தெரியும வகையில் இருந்தது இந்த ஏவுகணைகள்.

பிடமனூர்க் என்னும் ஷிவப்பநாய்க்கா கோட்டையினை பாழடைந்த கிணற்றைத் தூர்வாரிய போது அவற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரும்பு உருளைகள் கண்டெடுக்கப்பட்டன.

அவற்றை ஆய்வு செய்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இவை திப்பு சுல்தான் காலத்திய ஏவுகணைகள் என்பதை உறுதி செய்தனர்.

இன்று உலக நாடுகளுக்கு இடையே உள்ள மிகப் பெரிய அச்சமே அணுகுண்டு தாக்குதல் தான்.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஏவுகணைத் தாக்குதலுக்கான சோதனையில் ஈடுபடும் போதே ஒவ்வொரு நாட்டிற்கும் இடையே போர் பயணம் எழுகிறது. இந்நிலையில், 18ம் நூற்றாண்டிலேயே ஆங்கிலேயரை அடக்கி வைத்த பெருமை திப்புவைச் சேர்கிறது.

Related posts