கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி சென்னையில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனை கலைக்கட்டியுள்ளது.
கிருஷ்ணர் சிலைகள்
19-ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் தயாரிக்கப்பட்டகிருஷ்ணர்- ராதை சிலைகள் குழந்தை வடிவிலான கிருஷ்ணர், வெண்ணெய் சாப்பிடும் கிருஷ்ணர், புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணர் சிலைகள் என்று களிமண்ணால் செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்ட பலவிதமான கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்காக சென்னைக்கு வந்துள்ளது. 1/2 அடி முதல் 2 கிருஷ்ணர் சிலைகள் கண்கவரும் வகையில் பலவித வர்ணம் தீட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில், திருவல்லிக்கேணி, வடபழனி, தி.நகர், புரசைவாக்கம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் சாலையோரத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

