செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முதல் முறையாக நடந்தது.
அறுவை சிகிச்சை
காஞ்சிபுரம், உத்திரமேரூரை சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர்நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் சாலை விபத்தில் படுகாயமடைந்துள்ளார். உடனடியாக அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சுயநினைவு இல்லாமல் இருந்தவருக்கு தேவையான சிகிச்சை அளித்தும் எந்த வித முன்னேற்றம் ஏற்படவில்லை. பின்னர் பரிசோதனைகள் மூலம் ஆய்வு செய்ததில் அவர் மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவரது உறவினர்கள் உறுப்பு தானம் செய்ய சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில், அவரது உடலில் இருந்து கல்லீரல், 2 சிறுநீரகம், மற்றும் 2 கருவிழிகள் அகற்றபட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைபட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இத்தகைய அறுவை சிகிச்சை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முதல் முறையாக செய்யப்பட்டது.

