சினிமாவெள்ளித்திரை

சினிமா வட்டாரத்தில் சலசலப்பு – நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு திருமணமா?

பிரபல நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற போவதாக எழுந்த வதந்தியால் சினிமா வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

எஸ்.ஜே.சூர்யா

தனது இளம் வயதிலேயே, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் ஆகிய இருவரையும் வைத்து படம் இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யாவி. 1999-ல் வெளியான வாலி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தொடர்ந்து நியூ, அன்பே ஆருயிரே, இசை ஆகிய படங்களை இயக்கி அவரே நடித்திருந்தார். மேலும், மெர்சல், மாநாடு போன்ற படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து வருகிறார்.

திருமணம்

எஸ்.ஜே.சூர்யாவிற்கு 54 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில், விரைவில் அவருக்கு திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதற்கு மறுப்பு தெரிவித்த எஸ்.ஜே.சூர்யாவ, ‘திருமணம் பற்றி நான் சிந்திக்கவே இல்லை’ என்று பதிலளித்துள்ளார்.

Related posts