ஜாதி, மாதம் அற்றவர் என்ற சான்றுதழ் வழங்கக்கோரி தனி நபர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, மேற்கு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த மனேஜ். சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில், ‘எனது மகன் யுவன் மனோஜை வரும் அக்டோபா மாதம் பள்ளியில் சேர்க்க உள்ளேன். எனது மகனுக்கு ஜாதி, மதம் இல்லை எனக் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க வேண்டி அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இந்நிலையில், ஜாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என மனு அளித்திருந்தார். இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அந்நேரத்தில் அரசு சார்பாக சான்றிதழ் வழங்கப்படும் என கடிதம் அளிக்கப்பட்டது. இதனை நீதிபதி அப்துல் குத்தூஸ், 2 வாரங்களில் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

