எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் பாரபட்சம் இல்லாமல் முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
சபாநாயகர் அப்பாவு
சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி விவகாரத்தில் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அளித்துள்ள கடிதங்கள் குறித்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி இருவரும் கடிதம் எழுதி இருப்பது அவர்களின் கட்சி சார்ந்த விவகாரம் ஆகும். 4 பிரிவாக அதிமுகவினர் உள்ளனர். இதற்கு வேறு யாரும் காரணமில்லை. யார் மீதும் பாரபட்சம் இல்லாமல் வெளிப்படைத் தன்மையுடன் முடிவு எடுக்கப்படும். இந்த பிரச்சனையில் மற்றவர்கள் அரசியல்வாதிகள் தலையிட்டு குளிர்காய விரும்பவில்லை. அதிமுக உட்கட்சி பிரச்சனையில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறோம். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளது. எப்போது நடுநிலையோடு தான் இருப்போம் என கூறியுள்ளார்.

