சினிமாவெள்ளித்திரை

ரிலீஸ் தேதியை அறிவித்த ‘பொன்னியின் செல்வன் -2’ படக்குழு!

ரிலீஸ் தேதி

விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா ஆகியோர் நடிப்பில், கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வேகியான படம் ‘பொன்னியின் செல்வன்-1’. இயக்குனர் மணிரத்னம் இயக்கிய இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனிடையே ‘பொன்னியின் செல்வன் -2’ திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி ‘பொன்னியின் செல்வன் -2’ படம் அடுத்த ஆண்டு ஏப்ரம் 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதனை வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

Related posts