விஷ்ணு விஷால் நடித்த ‘கட்டா குஸ்தி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஓடிடி ரிலீஸ்
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், கடந்த 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘கட்டா குஸ்தி’. இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க, இயக்குனர் செல்லா அய்யாவு இப்படத்தை இயக்கியிருந்தார். மேலும், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம் 25 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ‘கட்டா குஸ்தி’ படம் வருகிற ஜனவரி 1-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.