சினிமாவெள்ளித்திரை

திரைக்கு வருவதற்கு முன் சாதனை படைத்த ‘பதான்’ திரைப்படம்!

சாதனை

இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ‘பதான்’. இதில் நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க, பிரபல ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதனிடையே இத்திரைப்படத்தின் முதல் பாடலான ‘அழையா மழை’ பாடல் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், ‘பதான்’ திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் ரூ.100 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts