அரசியல்இந்தியா

பீகார் மாநில சட்டப்பேரவையின் சபாநாயகராக அவாத் பிகாரி சவுத்ரி தேர்வு !

பீகார் மாநில சட்டப்பேரவையின் சபாநாயகராக அவாத் பிகாரி சவுத்ரி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவாத் பிகாரி சவுத்ரி 

ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்க, பாஜகவில் இருந்து பிரிந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. பீகார் சட்டசபையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சில நிமிடங்களுக்கு முன், பாஜகவை சேர்ந்த சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நிதிஷ் குமார் அரசு வெற்றி பெற்றுள்ளது.  இந்நிலையில், பீகார் மாநில சட்டப்பேரவையின் சபாநாயகராக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் அவாத் பிகாரி சவுத்ரி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

Related posts