உலகம்சமூகம்வணிகம்

பாகிஸ்தானில் சவுதி அரேபியா அரசு 100 கோடி டாலர்கள் முதலீடு !

பாகிஸ்தானில் 100 கோடி டாலர்கள் முதலீடு செய்ய உள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

100 கோடி டாலர்கள்

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானில் 100 கோடி டாலர்கள் முதலீடு செய்ய உள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் பின் அப்துல்லாவுக்கும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கும் இடையே நடந்த தொலைபேசி சந்திப்பு நடைபெற்றது. அப்போது, பாகிஸ்தானில் 1 பில்லியன் டாலர் முதலீட்டை செய்யவுள்ளதாக சவுதி அரேபியா இளவரசர் பைசல் தெரிவித்துள்ளார். இதனை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி வரவேற்றார். நட்பு நாடுகளிடமிருந்து பாகிஸ்தானுக்கு 4 பில்லியன் டாலர் நிதியுதவி கிடைக்கப் போவதாக அறிவிப்பு வெளியான நிலையில், சவூதி அரேபியா பாகிஸ்தானில் 100 கோடி டாலர்கள் முதலீடு செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related posts