சினிமாவெள்ளித்திரை

ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் – இயக்குனர் சங்கர் தகவல் !

இயக்குனர் சங்கர்

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில், ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு கடந்த 2019ம் ஆண்டு தொடங்கியது. பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பிறகு நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். இயக்குனர் ஷங்கரும் நடிகர் ராம் சரண் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். ‘ஆர்.சி.15’ தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளார் இயக்குனர் சங்கர். இதனிடையே சமீபத்தில் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு மீண்டும் பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில், இந்தியன் 2 மற்றும் ஆர்.சி.15 படப்பிடிப்பு ஒரே நேரத்தில் நடைபெறும் என்றும் ஆர்.சி.15 படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும் இயக்குனர் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts