கல்விதமிழ்நாடு

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு !

கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

தேர்வு முடிவுகள்

இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 18.72 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்நிலையில், செப்டம்பர் 7-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதனிடையே வரும் 30-ம் தேதிக்குள் நீட் இளநிலை தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பி.இ பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts