உலகம்சமூகம்தமிழ்நாடுபயணம்

9 நாகை மீனவர்கள் விடுதலை – இலங்கை நீதிமன்றம் உத்தரவு !

கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்ட 9 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

மீனவர்கள் விடுதலை

நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 10ம் தேதி கடலுக்கு 9 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அங்கு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை முல்லைத்தீவு அருகே கைது செய்தது படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அந்த மீனவர்கள் இலங்கையில் உள்ள திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், 9 நாகை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். நீதிமன்ற காவல் முடிந்த 9 மீனவர்களும் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை விடுவித்து திரிகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts