புதுவை, இந்திரா நகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் காகிதத்தில் விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர்.
காகித விநாயகர்
புதுச்சேரியில் உள்ள இந்திரா நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு கைவினை பொருட்கள் உருவாக்கும் பயிற்சியை ஓவிய ஆசிரியர் கிருஷ்ணன் அளித்து வருகிறார். இந்நிலையில், வரும் 31-ம் தேதி கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாணவர்களுக்கு விநாயகர் சிலைகளை உருவாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பள்ளியில் உள்ள செய்தி தாள்கள் மற்றும் பயனற்ற காகிதங்கள் ஆகியவற்றை கொண்டு சுமார் 4 ½அடி உயரத்தில் விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர்.
ரசாயனம் எதுவும் கலக்காமல் வெறும் 20 கிலோ காகிதத்தில் இந்த விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர். மேலும், 10 மாணவர்கள் சேர்ந்து ஒரு வாரத்தில் இதனை உருவாக்கியுள்ளனர்.

