சினிமாவெள்ளித்திரை

சில்க் சுமிதா வாழ்க்கை படத்தில் நடிக்கும் பிரபல நடிகை !

சில்க் சுமிதா

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் 1980 மற்றும் 90-களில் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக திகழ்ந்தவர் சில்க் சுமிதா. சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே 1996-ம் ஆண்டு இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சில்க் சுமிதாவின் வாழ்க்கை 2011ம் ஆண்டு ஹிந்தியில் ‘த டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் திரைப்படமாக வெளியானது. இதில் சில்க் சுமிதா கதாபாத்திரத்தில் நடிகை வித்யாபாலன் நடித்திருந்தார். இதற்காக அவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார்.

வாழ்க்கை படம்

இந்நிலையில், சில்க் சுமிதா வாழ்க்கை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் பாகத்தை தயாரித்த ஏக்தா கபூர் 2-ம் பாகத்தையும் தயாரிக்கிறார். மேலும், சில்க் சுமிதா கதாபாத்திரத்தில் பிரபல நடிகை டாப்சியிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Related posts