வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாட்கள் சுற்றுப்பயணமாக செப்டம்பர் மாத வாரத்தில் இந்தியா வருகிறார்.
பிரதமர் ஷேக் ஹசீனா
வங்காளதேச பிரதமர், ஷேக் ஹசீனா 4 நாட்கள் சுற்றுப்பயணமாக செப்டம்பர் மாத முதல் வாரத்தில் இந்தியா வருகிறார். அவர் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் 5-ந்தேதி அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில் இரு நாடுகள் இடையே உள்ள வர்த்தகம், எல்லை பிரச்சினை ராணுவம், போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஷேக் ஹசினா, பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். மேலும், இந்த பயணத்தின் போது இந்திய ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்கள் பலரையும் ஷேக்ஹசீனா சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

