காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றக்கோரி, மீண்டும் முதல்வரை சந்திக்க உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ‘ஆண்டுக்கு 250 டி.எம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதை தடுக்கும் விதமாக காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதை செய்தாலே, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களை நிரப்பிவிடும். இதனால் தமிழகத்தில் கூடுதலாக ஒரு லட்சம் ஏக்கர் சாகுபடி அதிகரிக்கும். மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை சேமிக்க, கொள்ளிடம் வரை காவிரி ஆற்றில் ஒரு கிலோ மீட்டருக்கு ஓன்று என 50 தடுப்பணை கட்ட வேண்டும். இதனால், தலா ஒரு டிஎம்சி வீதம் 50 டி.எம்சி தண்ணீரை சேமிக்கலாம். இந்த உபரிநீர் திட்டம் தொடர்பாக, ஏற்கனவே முதல்வரை சந்தித்து மனு அளித்துள்ளேன். தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசுவேன்’ என தெரிவித்துள்ளார்.

