உலகம்சமூகம் - வாழ்க்கைமருத்துவம்

பாகிஸ்தான் பிரபல பாடகி நய்யாரா நூர் காலமானார் !

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி நய்யாரா நூர் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.

நய்யாரா நூர்

பாகிஸ்தானில் பிரபலமான பின்னணி பாடகியாக விளங்கியவர் நய்யாரா நூர். இவர், இந்தியவில், அசாம் மாநிலத்தில் பிறந்தவர். நூரின் தந்தை, பாகிஸ்தான் மக்களால் கொண்டாடப்படும் தலைவரான முகமது அலி ஜின்னா மீது மிகுந்த பற்று உடையவர். இந்நிலையில், கடந்த 1958 ஆண்டு, இவரது குடும்பம் பாகிஸ்தானின் கராச்சிக்கு குடியேறியது. இவர் பாகிஸ்தானில் திரைப்படங்களில் பல பிரபலமான பாடல்களை பாடியுள்ள நூர், கஜல் பாடல்கள் பாடுவதிலும் பிரபலமாக விளங்கினார். கடந்த சிலமாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் கராச்சியில் நேற்று அவர் காலமானார். நய்யாரா நூர் மறைவுக்கு பாகிஸ்தான், பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related posts