அர்ஜென்டினாவில் பிறந்த குழந்தைகளை விஷ ஊசி செலுத்தி கொன்ற நர்ஸை போலீசார் கைது செய்துள்ளனர்.
நர்சு கைது
அர்ஜென்டினா, கார்டோபா நகரில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த மார்ச் முதல் ஜூன் மாதங்களுக்கு இடையில் ஆரோக்கியமாக பிறந்த 5 குழந்தைகள் பிறந்த சில நாட்களிலேயே இறந்துள்ளன. தொடர் இறப்புக்குறித்து யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை. ஆனால் கடைசியாக உயிரிழந்த குழந்தையின் பாட்டி கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தைகளின் உடம்பில் பொட்டாசியம் அளவு அதிகமாகயுள்ளது தெரியவந்தது. இதுபற்றிய விசாரணையில் உயிரிழந்த 5 குழந்தைகளில் 2 குழந்தைகளின் மருத்துவ பதிவுகளை மறுஆய்வு செய்ததில் அந்த குழந்தைகள் விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்ட தெரிய வந்தது. இந்நிலையில், குழந்தைகளுக்கு விஷ ஊசி செலுத்தி கொன்ற நர்சு பிரெண்டா அகுவேரோவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அர்ஜென்டினாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.