அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு புதிய பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய பதவிகள்
மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் அதிமுக செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்வது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவில் முதன்முறையாக துணைப் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளராக முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பது.
அதிமுகவின் அதிகாரங்கள் அனைத்தையும் பொதுச்செயலாளருக்கு வழங்கி சட்ட விதியில் திருத்தம் செய்யப்பட்டது. அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக இருந்து வந்த விதியை ரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம். 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தேர்தல் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமனை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்து தீர்மானம் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேறியது. அப்போது கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ‘அதிமுகவில் தொண்டர்கள் புரட்சி நடைபெற்றுள்ளது. தன்னம்பிக்கையால் உயர்ந்தவர் உழைப்பால் தொண்டர்களின் மனங்களை வென்றவர் இபிஎஸ். ராமனுக்கு மகுடம் சூட்டுகிறபோது லட்சுமணன் தியாகத்தினால் வரலாற்றில் இடம் பெறுவது உண்டு. அதேபோல் ஒன்றரை கோடி தொண்டர்கள் லட்சுமணன் போல இபிஎஸ் உடன் நிற்கிறோம்’ என ஆர். பி உதயகுமார் தெரிவித்தார்.

