நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துக்களை கூறிய தெலுங்கானா எம்.எல்.ஏவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
பா.ஜ.க. எம்.எல்.ஏ
நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துக்களை கூறியதால் தெலுங்கானா மாநிலம் கோஷமகால் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜா சிங்கை, தெலுங்கானா போலீசார் கைது செய்தனர். மேலும், ராஜா சிங் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், தெலுங்கானா மாநில எம்.எல்.ஏவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கண்டனம்
இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ ராஜா சிங்கின் கருத்து உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான இஸ்லாமிய மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் இரண்டாவது முறையாக பாஜக தலைவர்கள் இந்த மாதிரியான கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த எம்.எல்.ஏவுக்கு எதிராக எடுக்கப்பட்ட இடைநீக்க நடவ்டிக்கை உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்களின் வலியையும் வேதனையையும் தணிப்பதாக இல்லை’ என்று கூறியுள்ளார்.

