சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடுமருத்துவம்

மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் தற்கொலை முயற்சி !

தென்காசி அருகே மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை முயற்சி 

தென்காசி, ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மதுரையை சேர்ந்த சாந்தகுமாரி (46). மதுரையில் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார். இவர்களது இரு மகள்கள் தந்தையுடன் இருந்தபடி அங்குள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பணி மாறுதலாகி வந்துள்ளார்.

இவர் மன உளைச்சல் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சக காவலர்கள் சரியான முறையில் ஒத்துழைப்பு தரவில்லை எனவும் உயர் அதிகாரியின் டார்ச்சரும் இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவுப் பணியின் போது காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கொசுவர்த்தி திரவத்தை குடித்து மயங்கினார். இதையடுத்து அவரை மீட்டு திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts