கள்ளக்குறிச்சி அருகே உள்ள வீரசோழபுரத்தில் திருடப்பட்ட ஆறு சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிலைகள் மீட்பு
மத்திய மற்றும் மாநில அரசுகளின் தீவிர முயற்சியால் வெளிநாடுகளில் உலோக சிலைகள் மீட்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி அருகே உள்ள வீரசோழபுரத்தில் திருடப்பட்ட ஆறு சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 900 ஆண்டுகள் தொன்மையான சிலைகள் அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சோழர்கால சிலைகளை அமெரிக்காவில் இருந்து மீட்டெடுக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

