இந்தாண்டு வழங்கப்படும் பால சாகித்ய விருது அறிவிப்பில் எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு விருது வழங்கபடுகிறது.
பால சாகித்ய விருது
ஆண்டுதோறும் மத்திய அரசால் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த சாகித்ய விருதானது இந்திய மொழிகளில் உள்ள இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சாகித்ய அகாடமி வழங்கும் சிறுகதைகளுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் இவர் எழுதிய ‘மல்லிகாவின் வீடு’ என்ற சிறுகதைக்காக பால சாகித்ய புரஸ்கார் விருது ஜி.மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் 14ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் விருதும், 50,000 ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்படுகிறது.