ஆன்மீகம்

சென்னை வடபழனி முருகன் திருக்கோவில் வரலாறு

சென்னை நகரின் முக்கியத்துவம் வாய்ந்த முருகன் கோவில்களில் ஒன்றுதான் வடபழனி முருகன் கோவில். மிகவும் ஜன நெரிசல் நிறைந்த மக்கள் நடமாட்டமுள்ள இந்த முருகன் கோவில் சென்னை நகரின் அடையாளங்களில் ஒன்று.

முருகபக்தரான அண்ணாசாமி நாயக்கர் என்பவர் ஒரு ஒலைக்கொட்டகையில் வசித்து வந்தார். அவர் முருகனின் படத்தை வைத்து வழிபட்டு வந்தார். திருப்போரூர், திருத்தணி முருகன் கோவில்களுக்கும் சென்று வழிபட்டு வந்தார்.

தீராத வயிற்று வலி காரணமாக முருகனுக்கு காணிக்கை செலுத்துகிறேன் என்று தன் நாக்கை அறுத்து முருகனுக்கு காணிக்கை செலுத்தினார். இதற்கு “பாவாடம்” என்று பெயர். பாவாடம் காணிக்கையால் அவருடைய வயிற்றுவலி நீங்கப்பெற்றார்.

மேலும், அவர் நாளடைவில் அந்த இடத்தில் முருகனின் தெய்வீக சக்தியை உணர்ந்தார். அதனால் அவர் பிறரிடம் சொல்லும் சம்பவங்கள் அனைத்தும் நடந்தேறின.

இதனால் மக்கள் அவரிடம் அருள்வாக்கு கேட்க குவிந்தனர். முருகனின் தெய்வீக சக்தியால் பலருக்கு பலவித பிரச்சினைகள் தீர்ந்தது அவருக்கு பின் அவருடைய சீடர் இரத்தினசாமி செட்டியாரால் பழனியில் உள்ளது போல் சிலை செய்யப்பட்டு இந்த கோவில் கட்டப்பட்டது.

இக்கோவில் 1865ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கிருக்கும் முருகப்பெருமான் திருமணத்திற்கு மட்டுமின்றி குழந்தை பேறுக்கும் அருள்பாலிக்கிறார் என்று பக்தர்கள் மரத்தில் தொட்டில் கட்டுகிறார்கள்.

கோவிலில் நான்கு ராஜகோபுரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று மேலே கட்டப்பட்டுள்ளது. கோயிலின் கிழக்கு கோபுரத்தில் 108 பரதநாட்டிய நடனத்தையும் காணலாம்.

Related posts