அரசியல்தமிழ்நாடு

திராவிட மாடலுடன் மோதினால் உங்கள் மண்டை உடைக்கப்படும் – கி.வீரமணி பேச்சு !

மதுரையில் திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொது கூட்ட மேடையில் திராவிட மாடலுடன் மோதினால் உங்கள் மண்டை உடைக்கப்படும் என கி.வீரமணி பேசியுள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி

மதுரை மாவட்டம், அண்ணாநகரில் திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொது கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையேற்று பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், ’15 ஆண்டுகள் ராணுவ பயிற்சிக்கு பின்னர் ஓய்வு பெற வேண்டும் என்பதே நடைமுறை. அதை மாற்ற கூடாது. ஆயுத பயிற்சி கொடுக்கப்பட்ட இளைஞன் வேலை இல்லாமல் இருந்தால் பயங்கரவாதியாக மாறும் நிலை ஏற்படும், பாஜக எந்த திட்டத்தை அறிவித்தாலும் மறைவான விஷயம் உண்டு. இந்து என்ற வார்த்தை எந்த மொழியிலும் கிடையாது, சங்கராச்சாரியார் இது அன்னியர்கள் தமக்குவைத்த பெயர் என சொல்லியுள்ளார்.

veeramani

தமிழக ஆளுநர்

ஆளுநர் சனாதனத்திற்கு ஆதரவாக பேசுகிறார், அவர் ஓய்வு பெற்ற பின்பு இது போன்று பேசலாம், இங்கு பேச கூடாது. அவர் அரசு அதிகாரி அரசியல் அமைப்பு சட்டப்படி உறுதி மொழி எடுத்த பின்பு நியமிக்கப்படுகிறார், இன்றைய ஆளுநரிடம் நீட் தேர்வில் விதிவிலக்கு கேட்டு மசோதா அனுப்பினால், இவர் பிரித்து பார்க்க கூடாது ஜனாதிபதிக்கு தான் அனுப்ப வேண்டும். ஆனால், பிரச்சனை மக்கள் மத்தியில் வந்த பின்பு அனுப்பி வைக்கிறார்.

திராவிடம் தான் நம் இனம் அடையாளம். அந்த அடையாளத்தை போக்க நினைக்கிறார்கள். இன்றையை ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி. பாஜக ஆளும் மாநிலங்களில் மக்கள் வாக்கு பெற்று வரவில்லை, பல மாநிலங்களில் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்துள்ளார்கள், இங்கு குறுக்கு வழியில் வரவில்லை மக்கள் வாக்களித்து வந்துள்ளார்கள். இது தான் திராவிட மாடல் என்றார்.

r.n .ravi

திராவிட மாடல்

புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக கவர்னர் பேசுகிறார், அதில் சமுகநீதி இல்லை இடைநிற்றல் அதிகரிக்கும். மறைமுகமாக குலத் தொழிலுக்கு போக சொல்லுகிறார்கள். தன் ஜாதி தத்துவத்தை நிலை நிறுத்த முயற்சிக்கிறார்கள். நாகரிகம், அறிவு, வளர்ச்சி இது தான் திராவிட மாடல். பேதத்தை உருவாக்குவது ஆரிய மாடல், திராவிட மாடலுடன் மோதலாம் என மோதினால் இது இரும்பு கோட்டை மோதினால் உங்கள் மண்டை உடையும்’ என்றார்.

Related posts