PFI மற்றும் SDPI ஆகிய அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகள். பல வன்முறைகளை இந்த அமைப்பினர் நிகழ்த்துகின்றனர். இருப்பினும், இந்த அமைப்புகள் ஏன் தடை செய்யபடவில்லை என நீதிபதி கே.ஹரிபால் கேள்வி எழுப்பியுள்ளார்.
PFI
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(PFI) என்பது இந்தியாவில் செயல்படும் ஒரு இஸ்லாமிய அமைப்பாகும். நேஷனல் டேவோலப்மென்ட் பிரென்ட் என்ற அமைப்பே 2006 இல் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பாக மாறியது. இந்த அமைப்பு இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீடு, இஸ்லாமிய தனிநபர் சட்ட நீதிமன்றம், பட்டியலினம் மற்றும் முஸ்லீம் மக்களின் கல்வி மேம்பாடு போன்ற பணிகளில் செயல்பட்டு வருகிறது.
இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் இல்லலாமல் மனித உரிமை மீறல்களை எதிர்ப்பது, கொரோனா காலங்களில் மனித சடலங்களை எரிப்பது போன்ற சமுகப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
SDPI
இந்திய சமூக ஜனநாயக கட்சி 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு இந்திய அரசியல் காட்சியாகும். இந்த கட்சி இஸ்லாமிய தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக செயல்பட்டு வருகிறது.

RSS தொண்டர் கொலை வழக்கு
கேரள மாநிலம், பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் சஞ்சித் என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. சஞ்சித்தின் மரணத்தைதொடர்ந்து அவர் மனைவி ஷாரிகா CBI விசாரணை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் விசாரணை செய்தது.
பயங்கரவாத அமைப்புகள்
இந்த கொலை வழக்கில் PFI மற்றும் SDPI ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து நீதிபதி கே.ஹரிபால், ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ மற்றும் ‘இந்திய சமூக ஜனநாயக கட்சி’ ஆகியவை பயங்கரவாத அமைப்புகள்தான் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்றும்.
மேலும், ‘வன்முறை போன்ற தீவிரமான குற்றங்களை இந்த அமைப்பினர் செய்து வருகிறபோதிலும் இந்த அமைப்புகள் ஏன் தடை செய்யபடவில்லை’ என நீதிபதி கே.ஹரிபால் கேள்வி எழுப்பியுள்ளார்.

